×

அரசு பள்ளி மாணவர்களுக்கு நிவாரணம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியம் புதுப்பட்டினத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி (மேற்கு) உள்ளது. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை 18 மாணவர்கள் படிக்கின்றனர். தற்போது, மாணவர்களின் பெற்றோர்கொரோனா ஊரடங்கால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், இப்பள்ளி தலைமை ஆசிரியை கீதா, ஆசிரியை பத்மாவதி ஆகியோர், தங்களது பள்ளி மாணவர்களுகும் நிவாரணம் வழங்க முடிவு செய்தனர். அதன்படி, தங்களது சொந்த பணத்தில் தலா ரூ.1,500 வீதம் ரூ.27 ஆயிரத்தை வழங்கினர். இதனால், தலைமை ஆசிரியை, ஆசிரியை ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags : government school students , Government school student, relief
× RELATED மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி...