×

திருமுல்லைவாயல் 8வது வார்டில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி மனு

ஆவடி: ஆவடி மாநகராட்சி, 8 வார்டு  முன்னாள் கவுன்சிலரும், புரட்சி பாரதம் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளருமான முல்லை பலராமன் மாநகராட்சி ஆணையர் நாராயணனை சந்தித்து கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: ஆவடி மாநகராட்சி, 8வது வார்டுக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் பகுதிகளான சரஸ்வதி நகர், டாக்டர் அம்பேத்கார் நகர் உள்பட 32 நகர்கள் உள்ளன. இங்குள்ள சில தெருக்களில் மட்டும் தார் மற்றும் சிமெண்ட் சாலைகள், மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தெருக்களில் பல ஆண்டுகளாக சாலைகள் அறவே போடப்படவில்லை. இச்சாலை மண் சாலைகளாக காட்சி அளிக்கின்றன.

இதனால், சிறு மழை பெய்தால் கூட சாலைகள் சேறும், சகதியுமாக மாறி விடுகின்றன. இதனால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் வர முடியவில்லை. இதனால் உயிரிழப்பும், பொருட்சேதமும் ஏற்படுகின்றன. பல தெருக்களில் மின் விளக்குகளும் அமைக்கப்படவில்லை. பெரும்பாலான தெருக்களில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது. குடிநீர் திட்ட பணிகளும் நிறைவேற்றப்படாததால் பல ஆண்டுகளாக குடியிருப்புவாசிகள் குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : facilities ,Thirumullaivayal 8th Ward , Thirumullaivayal, 8th Ward, Basic Facility, Petition
× RELATED மெட்ரோ ரயில் நிலையங்களில்...