×

அம்மன் கோயில்களில் ஜாத்திரை விழா

திருத்தணி: திருத்தணி நகரில் ஆடிமாத ஜாத்திரை விழா நேற்று எளிமையான முறையில் நடந்தது. தணிகை மீனாட்சி அம்மன் கோவில், துர்க்கையம்மன் கோவில், எல்லையம்மன் கோவில், தணிகாசலம்மன் மற்றும் படவேட்டம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில் அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு கோவில்கள் பூட்டப்பட்டிருந்தது. இருப்பினும் சில பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.

Tags : festival ,temples ,Amman , Amman Temple, Jathira, Festival
× RELATED புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை காஞ்சி...