×

எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் விஷ பாம்பு: ஊழியர்கள் ஓட்டம்

சென்னை: கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டு தினம்தோறும் பராமரிப்பு பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலைய கண்காணிப்பாளர் தலைமையில் ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எழும்பூர் மெட்ரோ சுரங்க ரயில் நிலையத்தில் நேற்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் பராமரிப்பு பணி செய்தனர். அப்போது, சுரங்கநிலையத்திற்குள் ஆறரை அடி நீளமுள்ள விஷப் பாம்பு ஒன்று இருப்பதை கண்டு ஊழியர்கள் அலறியடித்து ஓடினர்.

வெளி ஆட்கள் யாரும் உள்ளே வர முடியாத நிலை என்பதால், உதவிக்காக மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு லாவகமாக பாம்பை பிடித்தனர். பின்னர் அதை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் ஒப்படைத்தனர். சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் விஷபாம்புகள் படையெடுப்பு உள்ளதால் பயணிகள் சேவை தொடங்கும் முன்பாக முறையாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Egmore ,station , Egmore, metro station, venomous snake, staff flow
× RELATED வட்டாட்சியர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு