×

கொரோனா தொடர்பாக தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை: அமைச்சர் பேட்டி

சென்னை :தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று அளித்த பேட்டி :  
தமிழகத்தில் 1 லட்சம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்து விட்டதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்க தலைவர் விளக்கம் அளித்துவிட்டார். தவறான தகவலை வெளியிடுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இது போன்ற தவறான தகவலை பரப்ப வேண்டாம். அனைவரும் மாஸ்க் அணிவது உள்ளிட்ட விதிகளை கடைபிடிக்க வேண்டும். ஆரம்ப நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து விட்டால் குணமடைந்து விடலாம். பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வங்கினால் இந்த நோய் தொற்றில் இருந்து மீண்டு விடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


Tags : interview ,Corona , Corona, misinformation, action, ministerial interview
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...