×

பல்லடம் அருகே 80 அடி டவர் சரிந்ததில் பைக்கில் சென்றவர் பலி

திருப்பூர்: திருப்பூர், சிறுபூலுவப்பட்டியை அடுத்த கொடிகம்பத்தை சேர்ந்தவர் செங்கிஸ்கான் சுபான்கான் (54). இவர், பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று காலை வேலைக்கு பைக்கில் புறப்பட்டார். பல்லடம் ரோட்டில் சென்றபோது அவருக்கு முன்னால் ஒரு லாரி சென்றது. அப்போது சூறைக்காற்று வீசியதால் பராமரிப்பு இல்லாத 80 அடி உயர செல்போன் டவர், மெல்ல சரிந்து விழ துவங்கியது. இதை பார்த்த லாரி டிரைவர் லாரியை நிறுத்தினார். ஆனால், லாரியை முந்தி செல்ல முயன்றபோது டவர் மீது மோதி சுபான்கான் விழுந்தார். டவர் அமுக்கி தலை நசுங்கி இறந்தார்.


Tags : Palladam ,tower , Palladam, 80-foot tower, biker, killed
× RELATED பைக் விபத்தில் வாலிபர் பலி