×

தொடர்ந்து சர்ச்சையாகும் கொரோனா மரணங்கள் தணிக்கை குழு முறையாக செயல்படுகிறதா? மருத்துவ நிபுணர்கள் குழு கேள்வி

சென்னை: சென்னையில் கடந்த மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் பதிவான கொரோனா மரணங்கள் குறைத்து காட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரிக்கவும், மரணங்களை ஆய்வு செய்யவும் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில் சென்னையில் விடுபட்ட 444 கொரோனா மரணங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா மரணம் தொடர்பாக ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு  அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த கொரோனா தொற்று ஏற்பட்டு பல நாட்களுக்கு முன்பு மரணம்  அடைந்தவர்கள் தொடர்பான விவரங்களை ஆகஸ்ட் 1ம் தேதி தினசரி அறிக்கையில் தமிழக அரசு சேர்த்தது.

இந்நிலையில், மரணங்களை தணிக்கை செய்ய மாநில மற்றும் மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட குழு முறையாக செயல்பட்டு இருந்தால் மரணம் விடுபடுவதை தவிர்த்து இருக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  இது தொடர்பாக அவர் கள் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடக்கத்தில் இருந்த ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் பல்வேறு இணை நோய்களால் மரணம் அடைந்தவர்கள், கொரோனா பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவர்கள் மற்றும் சந்தேக கொரோனா மரணங்களை ஆய்வு செய்து மாவட்ட மற்றும் மாநில அளவில் குழு அமைக்கப்பட்டது.

மாவட்ட அளவில் அமைக்கப்பட்டு குழுவான 2 நாட்களுக்கு ஒரு முறை கூடி அதிதீவிர அறிகுறிகளுடன் மரணம் அடைந்தவர்கள் மற்றும் அனைத்து மரணங்களின் காரணத்தை ஆய்வு செய்ய வேண்டும். இது தொடர்பான அறிக்கையை பொது சுகாதாரத்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும். மேலும் மரணங்களின் எண்ணிக்கையை குறைக்க தேவையான நடவடிக்ககைகளை எடுக்க வேண்டும். மாநில அளவிலான கொரோனா மரணங்கள் தணிக்கை செய்வது தொடர்பான விதிகளை உருவாக்க வேண்டும். மாவட்டங்களில் ஆய்வு குழுவின் அறிக்கையின் பரிந்துரைப்படி மரணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த அரசாணையின் படி மாநில மற்றும் மாவட்ட அளவிலான குழு முறையாக மரணங்களை தணிக்கை செய்து இருந்தால் மரணங்கள் விடுபடாமல் தடுப்பு இருக்கலாம். ஆனால் முறையாக செயல்படாத காரணத்தால் இத்தனை மரணங்கள் விடுபட்டுள்ளது. எனவே மாவட்ட மற்றும் மாநில அளவில் நிகழும் மரணம் தொடர்பான ஆய்வு குழு முறையாக செயல்படுவதை அரசு கண்காணிக்க வேண்டும். இவற்றை முறையாக அமல்படுத்தினால் மட்டுமே மரணங்களை உரிய நேரத்தில் பட்டியலில் சேர்க்க முடியும். இல்லை என்றால் குழு மேல் குழு அமைத்து மரணங்களை ஆய்வு வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : experts ,Corona Deaths Audit Committee ,panel , Continuing controversy, corona deaths, audit committee, panel of medical experts, question
× RELATED கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பினால்...