×

கொரோனா தொற்றை தடுக்க உலகின் தடுப்பூசி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு ஐதராபாத்தில் உற்பத்தி: அமைச்சர் கே.டி ராமாராவ் பேட்டி..!!

ஐதராபாத் : கொரோனா தொற்றை தடுக்க உலகின் தடுப்பூசி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு ஐதராபாத்தில் உற்பத்தி செய்யப்படுவதால் தெலுங்கானா தடுப்பூசி உற்பத்தியில் முன்னணியில் இருப்பதாக அம்மாநில தகவல் மற்றும் தொழில்நுட்பதுறை அமைச்சர் கே.டி ராமாராவ் தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் பணிகளில் பல விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் தடுப்பூசிக்கான பரிசோதனைகள் சிறப்பாக நடந்து வருகின்றன.

பல்வேறு துறைகளில் முன்னனியாக திகழும் தெலுங்கானா தடுப்பூசி உற்பத்தியிலும் முன்னணியில் உள்ளது. அனைத்து தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கும் தெலுங்கானா மாநிலமானது மத்திய அரசிடம் தங்கள் குரல்களை ஆதரிப்பதன் மூலம் பரவலாக்கம், நிதி மற்றும் ஒழுங்கு முறைகளின் அடிப்படையில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்துகிறது என்றும் அம்மாநில தகவல் மற்றும் தொழில்நுட்பதுறை அமைச்சர் கே.டி ராமாரராவ் தெரிவித்தார்.

மேலும், மாநிலத்தில் இன்று அரசு ஏற்பாடு செய்த சமநிலைப்படுத்தும் அறிவியல் மற்றும் அவசரம் என்னும் தலைப்பில் நடந்த கலந்துரையாடலில் தெலுங்கானாவின் தகவல் மற்றும் தொழில்நுட்பதுறை அமைச்சர் கே.டி ராமாராவ் கலந்து கொண்டு பேசுகையில், இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தியில் தெலுங்கானா முன்னணியில் இருக்கிறது. உலக அளவிலான தடுப்பூசிகளில் மூன்றில் 1 பங்கு ஐதராபாத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. கொரோனா சோதனை காலங்களில் ஐதராபாத் மருந்துதுறை தனது திறமையை நிரூபித்ததுடன், உலகின் தடுப்பூசி மூல தனங்களில் தனது நிலையை உறுதி செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags : Rama Rao ,world ,Hyderabad , Corona, Vaccine, Hyderabad, Manufacturing, Minister KD Rama Rao, Interview
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணி அபார வெற்றி!.