×

அமெரிக்கா, எகிப்தில் இருந்து 4.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து குப்பி இறக்குமதி: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: அமெரிக்கா, எகிப்து நாடுகளில் இருந்து 4.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை இறக்குமதி செய்ய இருப்பதாக மத்திய அரசு  தெரிவித்துள்ளது.  கொரோனா 2ம் அலையினால் நாடு முழுவதும் ஆக்சிஜன், தடுப்பூசி மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க,  வெளிநாடுகளில் இருந்து இவற்றை தயாரிப்பதற்கு தேவையான மூலப் பொருட்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு  துரிதப்படுத்தி உள்ளது.  இந்நிலையில் இது குறித்து மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `கொரோனா தொற்றை கட்டுப்படுத்த,  அமெரிக்காவில் உள்ள ஜிலெட் அறிவியல் நிறுவனம், எகிப்தில் உள்ள இவா பார்மா நிறுவனங்களிடம் இருந்து 4.5 லட்சம் குப்பி ரெம்டெசிவிர்  மருந்து இறக்குமதி செய்ய, மத்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் லைப்கேர் லிமிடெட் மூலம் ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இதில் முதல்  கட்டமாக ஜிலெட் அறிவியல் நிறுவனம் 75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் டோஸ் ரெம்டெசிவிர் குப்பிகளை இன்னும் ஓரிரு தினங்களில் அனுப்பும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, இவா பார்மாவும் முதலில் 10,000 டோஸ் குப்பிகளையும் பிறகு, ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை  50,000 டோஸ் குப்பிகளையும் வினியோகிக்கும்,’ என்று கூறப்பட்டுள்ளது. …

The post அமெரிக்கா, எகிப்தில் இருந்து 4.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து குப்பி இறக்குமதி: மத்திய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : US ,Egypt ,Central Govt. ,New Delhi ,central government ,Dinakaran ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்