×

வேலூர் மாவட்டத்தில் முறைகேடாக இ-பாஸ் வாங்கி கொடுத்த நபர் கைது: ரூ.2,500 வசூலித்ததும் விசாரணையில் அம்பலம்..!!

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் முறைகேடாக இ-பாஸ் வாங்கி கொடுத்த ஜெகதீஸ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இ-பாஸ் பெற்று தர ரூ.2,500 வசூலித்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. மேலும் முறைகேட்டில் தொடர்புடைய திருப்பூரை சேர்ந்த வடிவேல் என்பவரை போலீஸ் தேடி வருகிறது.

வேலூரில் முறைகேடாக இ-பாஸ் வழங்குவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  தற்போது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போது ‘இ-பாஸ்’ கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ‘இ-பாசை’ பொறுத்தவரை சரியான காரணங்களின் அடிப்படையில் அரசு வழங்கி வருகிறது.

இ-பாஸ்’ வழங்கும் பணியில் ஈடுபட்டு உள்ளவர்கள் மனிதநேயத்துடனும், மனசாட்சியுடனும் அணுக வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக விண்ணப்பம் செய்பவர்களுக்கு மட்டுமே ‘இ-பாஸ்’ வழங்கப்படுகிறது. ‘இ-பாஸ்’ வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ‘இ-பாஸ்’ வழங்குவதில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று ஆர்.பி.உதயகுமார் இன்று காலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Vellore ,Vellore district , Vellore, e-pass, abuse, person, arrest
× RELATED கொடைக்கானல் செல்ல இன்று முதல் இ-பாஸ் தேவையில்லை