×

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,000 கன அடியாக அதிகரிப்பு

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86.67அடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையில் நீர் இருப்பு 19,489 மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது. பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 22,000 கன அடி நீர் திறந்துள்ளதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் அதிகரித்து வருவதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Bhavani Sagar Dam , Bhavani Sagar Dam, Irrigation, Increase
× RELATED ஒரே மாதத்தில் மீண்டும் 100 அடியை...