×

கொடைக்கானல் ஜிஹெச்சில் எந்த வசதியும் இல்லை: கொரோனா நோயாளிகள் புகார்

கொடைக்கானல்: கொடைக்கானலில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களை அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கின்றனர். ஒவ்வொரு நோயாளியும் குறைந்தபட்சம் 5 முதல் 7 நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. ஆனால் இங்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. கழிப்பறை வசதிகள் போதிய அளவில் இல்லை. வயதானவர்கள் பயன்படுத்தக்கூடிய வெஸ்டர்ன் கழிப்பறை பழுதாகி உள்ளது. இதனால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் நோயாளிகளின் படுக்கைகளும் சேதமாகி கிடக்கின்றன.
கொடைக்கானல் குளிர்பிரதேசம் என்பதால் இரவில் தூங்க கம்பளி போர்வைகள் மிக அவசியமாகும்.

ஆனால் இங்கு கம்பளி போர்வைகளே இல்லை. இதனால் சிகிச்சைக்கு வருபவர்களே கம்பளி போர்வையை எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. இதேபோல் நாயுடுபுரத்தில் உள்ள தனிமை வார்டுகளும் அடிப்படை வசதிகளின்றி உள்ளன. இங்கு சுடு தண்ணீரும் கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. எனவே தமிழக அரசு சுகாதாரத்துறை கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து கழிப்பறை, மெத்தைகள், கம்பளி, சுடு தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : facility ,Corona , Kodaikanal, GH, Corona patients
× RELATED ஆலங்காயம் அருகே விபத்தில் தந்தை...