×

கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து 16,500 கன அடி நீர் வெளியேற்றம்: நீர்வரத்து அதிகரிப்பால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

மேட்டூர்: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து 16,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது.

இதையொட்டி காவிரி டெல்டா மற்றும் மேட்டூர் அணை கால்வாய் பாசன பகுதிகளில் விவசாயத்துக்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது. எனவே மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து 16,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நிலையில் மழை மேலும் தீவிரம் அடைந்து வருவதால் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நேற்று வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 350 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், காவிரி கரையோரம் உள்ள சேலம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமுடன் இருக்கும்படி அரசு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Kabini Dam ,Karnataka ,state ,parts , Karnataka, Kabini Dam, Irrigation, Cauvery, Flood Risk, Warning
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!