×

மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை..!! வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்!!!

மகாராஷ்டிரா:  மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த கனமழையால் திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மும்பையில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்த நிலையில் மும்பையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் நேற்றிரவு பெய்த தொடர் கனமழையால் அங்குள்ள வீடுகளில் வெள்ளம் நீர் புகுந்தது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் மும்பையையொட்டியுள்ள சாண்டா குரூஸ், கிங்ஸ் சர்க்கல் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் அங்குள்ள மக்களை வேறு இடங்களுக்கு செல்ல தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பானது அதிகளவு பரவி வரும் நிலையில், மேலும் வைரஸ் அதிகரிக்கும் வகையில் கனமழையானது பெய்து வருகிறது.

இதனால் மக்களின் இயழ்பு நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அதே நேரத்தில் மும்பையில் உள்ள மாநகராட்சி அதிகாரிகள் மழைநீர் தேங்கிய இடங்களிலிருந்து தண்ணீரை வெளியேற்ற தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் பாந்த்ரா மற்றும் சர்ச்கேட் பகுதிகளுக்கு இடையிலான இரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் போக்குவரதானது மாற்று வழிகளில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதக்கிடையில் கொரோனா தொற்றானது பெருமளவில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Tags : places ,Mumbai ,public ,houses , heavy rains, Mumbai rain
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...