×

சென்னையில் போலீஸ் தாக்கியதால் கூலித்தொழிலாளி தீக்குளித்து தற்கொலை..!! திடுக்கிடும் சிசிடிவி காட்சி வெளியானதால் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!!!

சென்னை:  சென்னையில் வீட்டு வாடகை கேட்டு போலீஸ் தாக்கியதால் மன உளைச்சலுக்கு ஆளான நபர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அதனுடைய சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஊரடங்கு காரணமாக பல்வேறு கூலி தொழிலாளிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தது தினந்தோறும் தவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சென்னையில் விநாயகபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் வீட்டில் சீனிவாசன் என்ற பெயிண்டர் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.

இதனையடுத்து  தற்போது பொதுமுடக்கத்தால் சீனிவாசன் வேலை இன்றி தவித்து வந்துள்ளார். இந்நிலையில், வாடகை தராததால் வீட்டை காலிசெய்யுமாறு வீட்டு உரிமையாளர் கூறியுள்ளார். இதுதொடர்பாக உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் பென்ஷா சீனிவாசனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மனமுடைந்த சீனிவாசன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

தற்போது சீனிவாசன் தீக்குளித்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே அவர் இறப்பதற்கு முன்பாக காவல் ஆய்வாளர் தம்மை தாக்கியதாலேயே  தற்கொலைக்கு முயன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் பென்ஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : suicide ,Chennai ,Police inspector ,CCTV , commits suicide , police ,Chennai,Police inspector suspended , CCTV footage
× RELATED பழனியில் போலீஸ் தாக்கியதாக கூறி...