×

அண்ணா பல்கலைக்கழகம் மீது கல்லூரி ஆசிரியர்கள் புகார்..!! நடத்தாத தேர்வுக்கு கட்டணம் செலுத்துமாறு அறிவுறுத்தல்!!!

சென்னை:  நடத்தாத தேர்வுக்கு தேர்வு கட்டணத்தை செலுத்துமாறு அனைத்து கல்லூரிகளுக்கும் அண்ணா பலக்லைக்கழகம் உத்தரவிட்டிருப்பதாக, தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளனர். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக கல்லூரியின் இறுதி ஆண்டு தேர்வு தவிர மற்ற தேர்வுகளையும், செமஸ்டர் தேர்வுகளையும் தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இந்த நிலையில் இறுதி ஆண்டு தேர்வை ஆன்லைனில் நடத்த அண்ணா பல்கலைகழகம் டெண்டர் கோரியுள்ளது.

இதனையடுத்து மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை வசூலித்து, வருகிற 7ம் தேதிக்குள் செலுத்துமாறு பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து, ஏற்கனவே வசூலித்த கட்டணத்தை வரும் ஆண்டு தேர்வு கட்டணமாக வைத்துக்கொள்ள ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதனையடுத்து பல்கலைகழக உத்தரவின்படி, தமிழகத்தில் சுமார் 10 லட்சம் மாணவர்களிடமிருந்து ஆயிரம் ரூபாய் வீதம் வசூலித்தால் சுமார் 100 கோடி ரூபாய் வரை வசூலாகும் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து நடத்தாத தேர்வுக்கு ஏன்? தேர்வு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று அவர்கள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags : College teachers ,Anna University , Anna University ,Exam fees,
× RELATED பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு 1 மணி...