×

கர்நாடக மாநிலம் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி!: பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தமது ட்விட்டர் பக்கத்தில் சித்தராமையா தெரிவித்துள்ளார். பரிசோதனை முடிவுகளில் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். நம்முடன் நேரடி தொடர்ப்பில் இருந்தவர்கள், தம்மை சந்தித்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு  சித்தராமையா கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் தங்களை தனிப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் அவரது அலுவலக ஊழியர்கள் ஆறு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து அவரது மகள் பத்மாவதிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், உள்துறை அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் ஜோஹன், உத்திரபிரதேச அமைச்சர் மகேந்திர சிங் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி மாதம் கேரளாவில் முதல் தொற்று பதிவான நிலையில், தற்போது நாட்டில் 18 லட்சம் பேர் வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, கர்நாடகாவில் கொரோனா பாதித்த இரண்டாவதாக முக்கிய தலைவராக சித்தராமையா உள்ளார்.

Tags : Chidramaiah ,Karnataka ,Hospital ,Bangalore ,Siddaramaiah ,Congress , Congress, Siddaramaiah ,COVID-19,
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!