×

இந்த மாதம் இறுதிக்குள் பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வுகள்.! அண்ணா பல்கலை

சென்னை: பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வுகளை இந்த மாதம் இறுதிக்குள் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. பொறியியல் மாணவர்கள் வேலைக்கு  தேர்வாகியும் சேர முடியாத சூழலில் உள்ளது. இதனால் 5 அலகுகளுக்கு பதில், 4 அலகுகளுக்கு மட்டும் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 30 சதவீத மதிப்பெண்களுக்கு ஒரு மணி நேரம் ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும் இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கு சூழல் சரியான உடன், எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.


Tags : end ,Anna University , Engineering final semester , Anna University
× RELATED அண்ணா பல்கலை. இறுதி செமஸ்டர் தேர்வுகளை...