×

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு : தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதால் காஷ்மீரில் 2 நாட்கள் ஊரடங்கு அமல்!!


 ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஆண்டு நிறைவையொட்டி தீவிரவாதிகள் தாக்குதலுக்கு திட்டமிட்டு இருப்பதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி நீக்கப்பட்டது. மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீரை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாவும் மத்திய அரசு பிரித்தது. இதனையொட்டி அந்த நாளை கருப்பு தினமாக பிரிவினைவாதிகளும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளும் அறிவித்துள்ளார்கள். வன்முறையில் ஈடுபட அவர்கள் திட்டமிட்டு இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, ஸ்ரீநகர் உட்பட மாநிலம் முழுவதும் இன்றும் நாளையும் 2 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் கொரோனா பரவலையொட்டி ஜூலை 31ம் தேதி வரை அமலில் இருந்த கட்டுப்பாடுகள் ஏற்கனவே 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தீவிரவாதிகள் அச்சுறுத்தலை அடுத்து, ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட உள்ளன. பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து ஆனதை அடுத்து, அம்மாநில  முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முஃப்தி, உமர் அப்துல்லா,அவரது தந்தை ஃபருக் அப்துல்லா உள்ளிட்ட நூற்றிற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் முன்னாள் முதல்வர்கள் 3 பேரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இவர்களில் உமர் அப்துல்லா, ஃபருக் அப்துல்லா ஆகிய இருவரும் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டனர். மெகபூபா முஃதிக்கு விதிக்கப்பட்டு இருந்த பொது பாதுகாப்புச் சட்டம் நாளையுடன் முடிவடைவதால் காவலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து ஜம்மு - காஷ்மீர் உள்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில் ஸ்ரீநகரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். இந்த வெடிகுண்டுகளை ஸ்ரீநகர் - பாராமுல்லா தேசிய நெடுஞ்சாலை பகுதியில் செயலிழக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Kashmir ,Jammu ,militants , Jammu and Kashmir, Special, Status, Cancellation, Terrorists, Kashmir, 2 days, Curfew, Amal
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...