
சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூரில் ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர் வீட்டில் 19 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர் ரங்கநாதன் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பெருட்களையும் மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். செங்கல்பட்டில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு ரங்கநாதன் சென்றிருந்த போது கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.