அவகாசம் மீண்டும் நீட்டிப்பு செபியில் 147 அதிகாரி பணியிடம் அக்.31 வரை விண்ணப்பிக்கலாம்

புதுடெல்லி: செபியில் 147 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்திய பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியம் (செபி), 147 மூத்த அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த மார்ச் 7ம் தேதி அழைப்பு விடுத்திருந்தது. விண்ணப்பிக்க மார்ச் 23ம் தேதி கடைசி நாள். ஆனால், ஊரடங்கு காரணமாக, இந்த அவகாசத்தை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்தது. பின்னர் மே 31 வரையிலும், அதன்பிறகு ஜூலை 31ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.

தற்போது மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளதாக, செபி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கிரேடு ஏ பணிக்கான தேர்வுகள் 2 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்ட தேர்வு ஜூலை 4ம் தேதியும் 2ம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 3ம் தேதியும் நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, புதிய தேர்வு தேதிகள் பின்னர் வெளியிடப்படும் என செபி தெரிவித்துள்ளது. உதவி மேலாளர், ஆய்வு குழு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.

Related Stories:

More
>