×

டிக்டாக்கை மைக்ரோசாப்டிடம் விற்க டிரம்ப் 45 நாள் கெடு

வாஷிங்டன்: இந்தியாவை தொடர்ந்து, அமெரிக்காவில் டிக்டாக்கை தடை செய்யப்போவதாக டிரம்ப் கடந்த வாரம் அறிவித்தார். ஆனால், இந்த முடிவை திடீரென மாற்றிய அவர், மைக்ரோசாப்டிடம் டிக்டாக்கை விற்க, டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்சுக்கு 45 நாள் கெடு விதித்துள்ளார். இதன்படி வரும் செப்டம்பர் 15க்குள் விற்பனை முடிய வேண்டும். மைக்ரோசாப்டின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளாவுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு, டிரம்ப் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், டிக்டாக் உரிமத்தை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வாங்க உள்ளதாக சத்ய நாதெள்ளா உறுதிப்படுத்தியுள்ளார்.

Tags : Trump ,Microsoft ,dictatorship , Dictoc, Microsoft, sell, Trump 45 day, deadline
× RELATED பெரம்பலூர் /அரியலூர் தனலட்சுமி...