×

ஜிம்கள், யோகா மையங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு வெளியீடு

புதுடெல்லி: நாடு முழுவதும் நாளை முதல் ஜிம்கள்,யோகா மையங்கள் திறக்கப்பட உள்ள நிலையில் அவைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* ஜிம்கள், யோகா மையங்களில் தனிமனித இடைவெளியை அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். உரிய இடைவெளியுடன் உடற்பயிற்சி உபரகணங்கள் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஒரு நபருக்கு 4 மீட்டர் சதுர அளவு ஒதுக்கப்பட வேண்டும்.
*  நுழைவு வாயில்களில் சானிடைசர் வைப்பது, தெர்மல் பரிசோதனை செய்வது கட்டாயமாகும்.
*  முககவசம் அணிந்திருந்தால் மட்டுமே உள்ளே நுழைவதற்கு அனுமதி அளிக்கவேண்டும்.
* 95 சதவீதத்துக்கும் குறைவாக ஆக்சிஜன் செறிவு உள்ளவர்களை உடற்பயிற்சி செய்வதற்கு அனுமதிக்க கூடாது.
* கட்டுப்படுத்தப்பட்ட சிவப்பு மண்டலங்கள் ஜிம் மற்றும் யோகா மையங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.
* ஸ்பாக்கள், நீராவி குளியல் மற்றும் நீச்சல் குளங்கள் ஆகியவற்றை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.


Tags : Gyms ,Yoga Centers: Federal Publication , Gyms, Yoga Centers, New Guidelines, Federal Publication
× RELATED தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள்...