×

கவர்னர் மாளிகையில் சுதந்திர தினவிழா விருந்து நிகழ்ச்சி ரத்து

சென்னை: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கவர்னர் மாளிகையில் நடைபெறும் சுதந்திர தினவிழா விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது என்று ராஜ்பவன் அறிவித்துள்ளது.
கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக கவர்னர் அலுவலகம் சார்பில் ஆண்டு தோறும் சுதந்திர தினத்தன்று விருந்து அளிப்பது வழக்கம். இந்நிலையில் கவர்னருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து இந்த ஆண்டு விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் காவேரி மருத்துவமனை சார்பில் மருத்துவர்கள் ஆளுநரை பரிசோதனை செய்தனர். சோதனையில் அவர் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். இவ்வாறு கவர்னர் மாளிைக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : banquet ,Independence Day ,Governor's House , Governor's House, Independence Day, banquet, cancellation
× RELATED சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்ற...