×

தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் அழைப்பு ஆகஸ்ட் 8ம் தேதி நாட்டை காக்கும் போராட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 8ம் தேதி நடைபெறும் நாட்டைக் காக்கும் போராட்டத்திற்கு  தொமுச பேரவை பொதுச்செயலாளர்  சண்முகம் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  மத்தியிலும் மாநிலத்திலும் நடைபெற்று வருகின்ற மக்கள் விரோத ஆட்சியை விரட்டியடித்து நாட்டைக் காக்கும் போராட்டம் வருகின்ற 8ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் நடைபெற உள்ளது. எனவே அன்று சமூக இடைவெளியைப் பின்பற்றி ஆங்காங்கு நம்முடைய எதிர்ப்புக் குரல்களை தங்களுக்கு உகந்த நேரத்தில் பணி செய்யும் இடத்திலோ, அல்லது தாங்கள் வசிக்கும் இடங்களிலோ மிகப் பெரிய போராட்டத்தை நடத்திட வேண்டும்.

இந்தியாவில் ஏறத்தாழ 46 கோடி குடும்பங்கள் அமைப்புசாரா தொழில்களை செய்து வரக்கூடிய தொழிலாளர்களைச் சார்ந்த குடும்பங்கள். விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியாகாத சூழலில் கிராமங்களில் விவசாயம் படிப்படியாக அழிக்கப்பட்டு அதனால் வெளியேறுகின்ற புலம்பெயர் தொழிலாளர்கள் கோடிக்கணக்கில் மாநிலம் விட்டு மாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று தங்களுடைய அன்றாட வாழ்க்கையை வாழ்தற்காக உழைத்து வருகின்றார்கள்.
இதைப் பற்றி சற்றும் கவலைப்படாத ஒரு கார்ப்பரேட் அரசாங்கமாக விளங்கும் மோடி அரசு எல்லோரையும் வீதியில் நிறுத்தி பசிப்பட்டினிக்கு ஆளாக்கியுள்ளது.

சிறு குறு தொழில்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு மீண்டும் தொழில்கள் தொடங்க அவர்களுக்கு ஆர்டர்கள் இல்லை.  எனவே மக்கள் விரோத - தொழிலாளர் விரோத ஆட்சியை விரட்டியடிப்பதற்காக மக்களை தயார் படுத்த, நம்முடைய வாழ்வாதாரங்களை நிலைநிறுத்திட, அரசு துறைகள், பொதுத்துறைகள் தொழிலாளர்களின் உரிமைகள், மக்களின் அடிப்படை உரிமைகளை பேணிப் பாதுகாத்திட ஓரணியில் திரள உங்கள் அனைவரையும் ஆகஸ்ட் 8ம் தேதி அழைக்கின்றோம்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Shanmugam ,struggle ,Thomusa Assembly ,country , Thomusa Assembly, General Secretary Shanmugam, Call, August 8, Defending the Nation
× RELATED ஏ.சி.சண்முகம் விரட்டியடிப்பு