×

டெல்டாவில் 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்துவிடப்பட்டு, காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசன வயல்களுக்கு 15 நாட்களுக்கு முன்பாகவும், கடைமடை பாசன பகுதிகளுக்கு 25 தினங்களுக்கு முன்பாகவும் பாசன நீர் சென்றடைந்தது.
இந்த ஆண்டில், டெல்டா மாவட்டங்களில் 3ம் தேதி (நேற்று) நிலவரப்படி 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 30 ஆண்டு வரலாற்றில் அதிகபட்ச பரப்பு  இதுதான். இதன்மூலம் 6.50 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

Tags : Delta , Delta, on 3.87 lakh acres, cultivates curry
× RELATED தென், டெல்டா மாவட்டங்களில் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு