×

தடயவியல் துறை அதிகாரி ஆசிட் குடித்து தற்கொலை: வடபழனியில் பரபரப்பு

சென்னை: தடயவியல் துறை பெண் அதிகாரி ஒருவர் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வடபழனியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வடபழனி கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் யுவராணி (49). இவர், தனது கணவர் ரகுராமன் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துறையில் அதிகாரியாக வேலை செய்து வந்தார். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த யுவராணி கழிவறையை சுத்தம் செய்ய வைத்திருந்த ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது ஆசிட் வீரியத்தால் எரிச்சல் தாங்க முடியாமல் அலறி துடித்தார்.

இதை பார்த்த அவரது கணவர் ரகுராமன், உடனே மனைவியை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பின்னர் மருத்துவர்கள் பரிந்துரைப்படி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த யுவராணி நேற்று முன்தினம் நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து யுவராணி கணவர் ரகுராமனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் தடயவியல் துறை அதிகாரி ஒருவர் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வடபழனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : officer ,suicide ,North Palani , Forensic Officer, Acid Drinking, Suicide, Northampton
× RELATED மாற்றுத்திறனாளிகள் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும்