×

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் 2, 3ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி

புதுடெல்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களிடம் செலுத்தி 2, 3ம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு (டிசிஜிஐ) அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி உலகெங்கிலும் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அந்நாட்டின் அஸ்ட்ராஸெனகாவுடன் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்ட் தடுப்பு மருந்து முன்னிலையில் உள்ளது. இதன் ஆரம்பகட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. இங்கிலாந்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில், இந்த மருந்து மூலம் சிறப்பான பலன் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து 2, 3ம் கட்ட ஆய்வுகள் பல்வேறு இடங்களில் நடத்தப்படுகிறது.

இந்தியாவில் இம்மருந்தை தயாரிக்க புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மருந்து நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவில் ஆக்ஸ்போர்டு மருந்தின் 2, 3ம் கட்ட மருத்துவ ஆய்வை மேற்கொள்ள உள்ளது. இதற்கான அனுமதி கோரி கடந்த மாதம் 25ம் தேதி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் சீரம் இன்ஸ்டிடியூட் விண்ணப்பித்திருந்தது. இதனை பரிசீலிக்க மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் சிறப்பு நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஆய்வுகள் நடத்தியதைத் தொடர்ந்து ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மனிதர்கள் மீது 2 மற்றும் 3ஆம் கட்ட பரிசோதனை செய்ய அனுமதி வழங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிற்கு கடந்த மாதம் 31ம் தேதி பரிந்துரை செய்தது. இதனை ஏற்றுக் கொண்ட அமைப்பு, இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை 2 மற்றும் 3ஆம் கட்ட பரிசோதனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

இதனால், விரைவில் சீரம் நிறுவனம் பரிசோதனையை தொடங்க இருக்கிறது. இந்த பரிசோதனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, புனே பிஜே மருத்துவக்கல்லூரி, பாட்னாவில் ராஜேந்திரா நினைவு மருத்துவமனை, கோரக்பூரின் நேரு மருத்துவமனை, விசாகப்பட்டிணத்தில் ஆந்திரா மருத்துவக் கல்லூரி, மைசூருவில் ஜே.எஸ்.எஸ் கல்லூரி உள்ளிட்ட 17 மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படுகிறது. உடல் ஆரோக்கியமான 18 வயதுக்கும் மேற்பட்ட 1,600 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் 2 டோஸ் மருந்துகள் இரு கட்டமாக 29 நாட்கள் இடைவெளியில் செலுத்தி பரிசோதிக்கப்படும். உடல் ஆரோக்கியமான 18 வயதுக்கும் மேற்பட்ட 1,600 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் 2 டோஸ் மருந்துகள் இரு கட்டமாக 29 நாட்கள் இடைவெளியில் செலுத்தி பரிசோதிக்கப்படும்.

Tags : Oxford Corona ,India ,phase trials ,Oxford ,Corona , Oxford, Corona Vaccine, India, 2nd and 3rd Phase Testing, Permission
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...