×

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி பணியாளர்கள் சென்னை திரும்ப நிறுவனங்கள் மூலம் இ- பாஸ்

சென்னை: சென்னையில் தொற்று கணிசமாக குறைந்தால் மட்டுமே முழு தளர்வு சாத்தியமாகும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டல் இலவச கொரோனா தனிமைப்படுத்துதல் மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று தொடங்கி வைத்தனர்.  இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது: தற்போதுள்ள சூழலில் முழு தளர்வு என்பது சற்று கடினம் தான். இன்னும் மூன்று மாதங்களாவது இந்த நிலை தொடர்ந்தால் தான் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

சென்னைக்கு வரும் தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மூலம் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம். 2 நாட்களாக தொழில்சார்ந்த நிறுவனங்களுக்கு இ-பாஸ் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.  நாள் ஒன்றுக்கு 500 முதல் 1000 இ-பாஸ் வரை அனுமதி வழங்கப்படுகிறது. வரக்கூடிய நாட்களில் விண்ணப்பங்களை பொறுத்து இ-பாஸ் அனுமதி எண்ணிக்கை அதிகரிக்கலாம். சென்னைக்கு வந்ததும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் 14 நாள் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் செய்து இருந்தால் தான் அனுமதி வழங்கப்படும். கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாத மொத்த உயிரிழப்புகளை காட்டிலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உயிரிழப்புகள் குறைந்திருந்த நிலையில் ஜூன் மாதத்தில் அதிகரித்தது குறித்து வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். பல உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் தாமதமாக  கிடைப்பதால் கூட எண்ணிக்கை சற்று மாறுபட வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

* சோதனை அதிகரிப்பு
சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் நோய் தொற்று அதிகரித்து வரும் சூழலில் மதுரை, ராமநாதபுரம், செங்கல்பட்டு  உள்ளிட்ட அதிக நோய் பாதிப்புகள் கண்டறியப்பட்ட மாவட்டங்களில் பரிசோதனையின் எண்ணிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags : Prakash ,Corporation ,Interview Employees ,Companies ,Chennai ,e-Pass ,Commissioner , Mānakarāṭci āṇaiyar pirakāṣ,pēṭṭi,paṇiyāḷarkaḷ,ceṉṉai tirumpa, niṟuvaṉaṅkaḷ, i- pās
× RELATED தினமும் காலையில் எழுந்தவுடன் 100...