×

கொரோனா பாதித்தவரை கண்காணிக்க ரிமோட்: ஐஐடியில் உருவாக்கம்

சென்னை: சென்னை ஐஐடியின் ஹெல்த்கேர் டெக்னாலஜி சென்டர், ஐஐடியின் ரிசர்ச் பார்க்கின் ஹெலிக்சான் ஆகியவை இணைந்து ரிமோட் மூலம் இயங்கும் பேஷன்ட் மானிடரிங் கருவியை உருவாக்கியுள்ளன. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளை தொடர்ந்து கண்காணிக்க முடியும். நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு பொதுமருத்துவ மனை, தனியார் மருத்துவ மனைகளில், வீடுகளில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை கண்காணிக்க வசதியாக சென்னை ஐஐடி மற்றும் அதன் ரிசர்ச் பார்க்கின் ஒரு அங்கமான ஹெலிக்சான் ஆகியவை ஒன்றிணைந்து ரிமோட் பேஷன்ட் மானிடரிங் கருவியை கண்டுபிடித்துள்ளன. இந்த கருவி எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கருவியை நோயாளியின் விரல்களில் பொருத்தி கண்காணிக்க முடியும். இதன் மூலம் பெறப்படும் டேட்டாக்களை, மொபைல் போன் அல்லது சென்ட்ரல் மானிடரிங் சிஸ்டத்தில் கண்காணிக்க முடியும். நோயாளியின் உடல் வெப்பத்தை விரல் மூலமாகவே கணக்கிட முடியும். இது குறித்து ஐஐடி பேராசிரியர் மோகன சங்கர்சிவப்பிரகாசம் கூறியதாவது: இந்த கருவியை ஒரு மருத்துவ கருவியாக நோயாளிகளின் மணிக்கட்டு பகுதியில் பொருத்திக் கொள்ள முடியும். இது மருத்துவ ரீதியாக நோயாளிகளுக்கு தேவைப்படும் தரத்தை நிறைவு செய்யும் வகையில் அமைந்துள்ளது. நோயாளிகளுக்கு இதை எளிதாக பொருத்த முடியும். இதற்காக பயிற்சி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இது கொரோனா நோயாளிகளுடன் மருத்துவர்கள், செவிலியர்கள் நெருங்கி இருக்க வேண்டிய கட்டாயத்தை தவிர்க்கிறது.

Tags : IIT ,corona victims , Corona, monitor, remote, IIT, creation
× RELATED நீரியல் நிபுணர் இரா.க.சிவனப்பன் காலமானார்..!!