×

தமிழகத்தில் 21 டிஎஸ்பிக்கள் மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 21 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, டிஜிபி திரிபாதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 21 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து சென்னை சிபிசிஐடி மெட்ரோ-1 டிஎஸ்பியாக இருந்த ரவிச்சந்திரன் மதுரை மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமை டிஎஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், தமிழகம் முழுவதும் திருச்சி, கரூர், விருதுநகர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 21 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Tags : In Tamil Nadu, 21 DSPs have been transferred, DGP Tripathi
× RELATED தூத்துக்குடி இளைஞர் செல்வன் கொலை...