×

தமிழக அரசின் முடிவுக்கு தலைவர்கள் வரவேற்பு

சென்னை: புதிய கல்விக் கொள்கை அறிவித்துள்ள மும்மொழித் திட்டத்தை ஏற்கமாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்): மும்மொழித் திட்டத்தை ஏற்காத தமிழக அரசின் முடிவை வரவேற்கிறோம். இதில் இறுதிவரை உறுதியாக இருக்க வேண்டும். ராமதாஸ் (பாமக நிறுவனர்): இரு மொழிக் கொள்கையே தொடரும் என்ற அரசின் முடிவு  வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது.

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): மும்மொழிக் கொள்கையை கைவிட வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையோடு தமிழக அரசு தனது பொறுப்பை தட்டிக்கழித்துவிடக் கூடாது. இந்த கல்விக் கொள்கையை முற்றிலுமாக கைவிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். சரத்குமார் (சமக தலைவர்): மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையிலும், பெரும்பாலான கட்சியினரின் கோரிக்கையின் அடிப்படையில் அறிவிப்பை வெளியிட்டிருக்கும் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தொடர்ந்து தமிழக மக்களுக்கு ஆதரவாக தர வேண்டும்.

Tags : Leaders ,Government of Tamil Nadu , Decision of the Government of Tamil Nadu, Leaders, Welcome
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...