×

வாகனம் மோதி வாலிபர் பலி

திருத்தணி: திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் டெல்லி ராஜன் (24). இதே பகுதி குளக்கரை தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (18). இருவரும் நேற்று முன்தினம் தங்களது இருசக்கர வாகனத்தில் திருத்தணி வழியாக திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, மாவூர் பேருந்து நிறுத்தத்தில் பழுதாகி நின்றிருந்த கனரக லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதினர். இதில் தூக்கி வீசப்பட்ட டெல்லி ராஜன், சாலையின் நடுவில் விழுந்தார். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும், அவருடன் சென்ற யுவராஜ் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்த கனகம்மாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகா (பொ) மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று யுவராஜை மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். மேலும், டெல்லி ராஜன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தின் டிரைவரை தீவிரமாக தேடுகின்றனர்.


Tags : Vehicle collision , Vehicle Mo, Valipar, killed
× RELATED வாகனம் மோதி விவசாயி பலி