×

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது

புழல்: மதுரவாயலை சேர்ந்தவர் கலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், மாதவரம் பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 9 வயதில் மகள் இருக்கிறாள். இந்நிலையில், இருவரும் மாதவரம் பேருந்து நிலையம் அருகில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, திருவள்ளூர் ராஜாஜி நகர் மேட்டுத்தெருவை சேர்ந்த சமையல் தொழிலாளியான சந்தோஷ் (35) என்பவர். சிறுமியிடம் சில்மிஷம் செய்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சிறுமியின் தாய், மாதவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் இந்த வழக்கு புழலில் உள்ள மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாற்றப்பட்டது. அதன்பேரில் போலீசார் சந்தோஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Girl, sexual harassment, pox, teen arrested
× RELATED முதியவரிடம் வழிப்பறி