×

திருமழிசை காய்கறி சந்தையில் கலெக்டர் மகேஸ்வரி ஆய்வு

திருவள்ளூர்: திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, சந்தையில் தொடர் மழை காரணமாக சேதமடைந்த டி-பிளாக் பகுதி முழுமையாக சீர் செய்யப்பட்டு, எ-பிளாக் மற்றும் பி-பிளாக் பகுதிகளில் தரைப் பகுதி மற்றும் பாதைகளை மண் கொண்டு சீர் செய்து சமன்படுத்தி உறுதியான சாலைகளை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் நகராட்சி சார்பாக நீர் உறுஞ்சும் இயந்திரங்கள், மின் மோட்டார்கள் உள்ளிட்டவைகளை கொண்டு மழைநீர் அகற்றும் பணிகள், சந்தையில்  கொட்டப்படும் காய்கறி கழிவுகள் உள்ளிட்ட குப்பை கழிவுகளை நகராட்சி, பேரூராட்சி வாயிலாக உடனுக்குடன் அப்புறப்படுத்தி, பிளிச்சிங் பவுடர் கொட்டி தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள உத்தரவிட்டார். இதேபோல், கழிவறைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொண்டு, நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் இருப்பு உள்ளதை ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியின்போது, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (திருமழிசை) கோவிந்தராஜ், வருவாய் கோட்டாட்சியர் ப்ரீத்தி பார்கவி, பூந்தமல்லி வட்டாட்சியர் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் உடனிருந்தனர்.


Tags : Maheshwari ,Thirumalisai , Thirumalisai, Vegetable Market, Collector Maheshwari, Research
× RELATED இனி ஞாயிற்றுக் கிழமைகளில் திருமழிசை காய்கறி சந்தை இயங்காது