ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து..!!

சென்னை: சென்னையில் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக ராஜ் பவன் தெரிவித்துள்ளது. சுதந்திர தினத்தின் மாலையில் நடைபெறும் தேநீர் விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.  

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உடல்நிலை சீராக உள்ளதாக ராஜ்பவன் விளக்கம் அளித்துள்ளது  முன்னதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. லேசான அறிகுறி உள்ளதால் அவரை ராஜ்பவனில் தனிமைப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது. சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில், கடந்த வாரம் கவர்னர் மாளிகையின் பிரதான வாயிலில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என 84 பேருக்கு, நோய் தொற்று இருப்பது உறுதியானது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2.51 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், தொடர்ந்து தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கடந்த 5 நாட்களாக தொற்று எண்ணிக்கை 6 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக குறைந்த நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் மருத்துவமனையின் மருத்துவர் குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

Related Stories:

>