×

கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடலை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு

தேனி: கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடலை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடலை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற விவகாரம் பிறப்பித்துள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் 14வது வார்டு அழகு பிள்ளைத் தெருவைச் சேர்ந்த சின்னம்மாள்(80), கடந்த சில தினங்களுக்கு முன் வயிற்றுப்போக்கு காரணமாக அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை, கூடலூர் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குப் பரிசோதனைக்காக அவரது மகன் அழைத்துச் சென்றார். வயிற்றுப்போக்கிற்கு மருந்து அளித்த மருத்துவர், கொரோனா பரிசோதனையும் மேற்கொண்டு, அந்த பெண்ணை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில் சின்னம்மாளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சின்னம்மாளின் மகனைத் தொடர்பு கொண்ட மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், வீட்டிலே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி உள்ளனர். நோயின் தாக்கம் அதிகரித்ததையடுத்து சின்னம்மாள் உயிரிழந்தார். சின்னம்மாள் பலியானது குறித்து கூடலூர் நகராட்சி சுகாதாரப் பிரிவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நேரடியாக சின்னம்மாள் வீட்டிற்குச் சென்று ஆய்வு செய்த சுகாதாரத் துறையினர் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும் என மகனிடம் தெரிவித்துவிட்டுச் சென்றனர். சுமார் 12 மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் என எதுவும் வரவில்லை. இதற்கிடையே, சம்பந்தப்பட்ட தெருவில் வசித்து வருபவர்கள், உடலை அங்கு வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து நகராட்சி, சுகாதார பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்த போதும் அவர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.

ஒருகட்டத்தில் விரக்தியடைந்த சின்னம்மாளின் மகன், தள்ளுவண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்து வந்து, வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த தனது தாயின் சடலத்தை மயானத்திற்குக் கொண்டு சென்றார். கொரோனா தொற்று பாதித்தவரின் உடலைப் பாதுகாப்பு இல்லாமல் தள்ளுவண்டியில், முக்கிய வீதிகள் வழியாக சின்னம்மாள் மகன் கொண்டு சென்றதைச் சிலர் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஒருசேரக் ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடலை தள்ளுவண்டியில் எடுத்து சென்று தகனம் செய்த விவகாரத்தில் விசாரணை நடத்தி 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செயய தேனி மாவட்ட ஆட்சியர், நகராட்சி  நிர்வாக ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Human Rights Commission ,Corona , Theni, Corona, Body, Trolley, Report, State Human Rights Commission
× RELATED மாஜி அமைச்சர் ஜெயக்குமார் வழக்கை...