×

அமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்காதது ஏன்? காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கேள்வி

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா தொற்றுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்காமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பது வியப்பாக இருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், உடல்நிலை சீராகவும், நலமுடன் இருக்கிறேன். மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். என்னுடைய கடந்த 10 நாட்களாக நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், நம்முடைய உள்துறை அமைச்சர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள போது, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல், அண்டை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்பது வியப்பாக இருக்கிறது. மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த நினைத்தால், எய்ம்ஸ் போன்ற பொது நிறுவனங்களுக்கு அரசின் உயர்ந்த பதவிகளில் இருப்போர் ஆதரவு அளிப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.Tags : Amitsha ,Sasi Tharoor ,Ames Hospital ,Congress ,AIIMS , Amit Shah, AIIMS, Shashi Tharoor
× RELATED அமித்ஷாவுக்கு எடப்பாடி பிறந்தநாள் வாழ்த்து