×

புதுக்கோட்டை அருகே 10ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர் கைது!!!

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே 10ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல் ஆபாச படமெடுத்து மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் பாலியல் தொல்லைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இதனால் பச்சிளம் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். மேலும் பாலியல் வன்கொடுமையால் பலரும் படுகாயமடைந்துள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர்.  

இருப்பினும் இந்த நிலை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது. அதாவது கீரனூர் அருகே குப்பத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய 10ம் வகுப்பு மாணவியை அதே ஊரை சேர்ந்த உறவினரான முருகன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், பாலியல் செய்ததோடு மட்டுமல்லாமல் அதனை ஆபாச படமாக எடுத்து மாணவியின் தாயாரிடம் காட்டி, தமக்கு திருமணம் செய்துவைக்கும்படி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ மற்றும் தகவல் தொழிநுட்ப சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். அதிலிருந்து மீள்வதற்குள்  அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் நிகழ்ந்து கொண்டே வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : student ,Pudukkottai , Youth arrested , raping ,10th class student ,Pudukkottai,
× RELATED படம் தயாரிக்கும் டாப்ஸி?