×

கொடுவிலார்பட்டியில் தூர்வாரப்படாத கழிவுநீர் ஓடை: பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு

ஆண்டிபட்டி: தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். கிராமத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்புத் தொழில் பிரதானமாக உள்ளது. கிராமத்தின் வழியாக செல்லும் கழிவுநீர் ஓடையில், கோழிக்கடை இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால், கழிவுநீர் தேங்குகிறது. இதை தூர்வாராததால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் ஓடையில் செடிகள் வளர்ந்து புதர்போல காட்சியளிக்கின்றது.

மேலும், கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியை சுத்தம் செய்யாததால், குடிநீரில் புழுக்கள் கலந்து வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தருவதற்கு, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. கொரோனா தடுப்பு பணிகளையும் முறையாக செய்யவில்லை. கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.


Tags : public , Koduvilarpatti, sewage stream, public, sanitation
× RELATED பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்!