×

திருத்துறைப்பூண்டி நகரில் குடியிருப்பு பகுதியில் மண்டி கிடக்கும் செடிகொடிகள்: அகற்ற கோரிக்கை

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி திருவாரூர் சாலையில் விஜிலா தியோட்டர் எதிரில் ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான காலிமனை இடம் உள்ளது. கிழக்குப்புறம் திருத்துறைப்பூண்டி-திருவாரூர் சாலை உள்ளது. இந்த இடம் அருகில் கால்நடை மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, இரண்டு தனியார் பள்ளிகள் உள்ளது. 100க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. மேலும் எஜமான் நகருக்குபோகும் சாலையும் உள்ளது.தற்போது தொடர்ந்து மழை பெய்வதால் ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான இடத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. செடி கொடிகள் காடுபோல் காட்சி அளிக்கிறது. மேலும் மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது.

எனவே இந்த இடத்தில் உள்ள செடி கொடிகளை அகற்றி மழை நீரை வெளியேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து ஒன்றியகுழு தலைவர் பாஸ்கர் கூறிகையில், எந்த ஊர்களிலும் நகரில் மைய பகுதியில் ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான இடம் கிடையாது. திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு மட்டும் திருத்துறைப்பூண்டி நகரில் இடம் உள்ளது. இதில் ஒரு இடத்தில் பூமாலை வணிக வளாகம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. இதையும் விரைவில் சீரமைக்கப்பட உள்ளது. மேலும் மழைநீர் தேங்கி செடி கொடி மண்டி கிடப்பது சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு இந்த இடத்தில் ஒரு கோடி மதிப்பில் வணிக வளாகம் கட்டப்படும் என்றார்.

Tags : area ,removal ,Thiruthuraipoondi , Thiruthuraipoondi, residential, vines
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...