×

தாம்பட்டி - நுந்தளாமட்டம் சாலையில் தடுப்புசுவர் கட்டும் பணி தீவிரம்

ஊட்டி:நீலகிரி மாவட்டம் ஊட்டி - மஞ்சூர் சாலையில் தடுப்பு சுவர் கட்டுதல், சாலை விரிவாக்கம், மழைநீர் கால்வாய் அமைத்தல், கான்கீரிட் தளம் அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தாம்பட்டி - நுந்தளாமட்டம் இடையே குறுகலான வளைவு பகுதி உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சாலையோர மண்திட்டுகள் இடித்து அகற்றி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் தடுப்பு சுவர் கட்டும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.


Tags : road ,Thampatti - Nunthalamattam , Thampatti, Nunthalamattam, barrier
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...