×

பந்தலூர், மஞ்சூரில் விளை பயிர்களை சேதம் செய்து காட்டு யானைகள் அட்டகாசம்

பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி மற்றும் மஞ்சூரில் குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள் பயிர்களை சேதம் செய்தன. இதையடுத்து யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.   பந்தலூர் அருகே சேரம்பாடி சுற்றுவட்டாரம் பகுதிகளான சப்பந்தோடு, புஞ்சக்கொல்லி, சுங்கம்,கோரஞ்சால்  உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கடந்த சில நாட்களாக முற்றுகையிட்டு விளைபயிர்களை சேதம் செய்து வருவதோடு,குடியிருப்புவாசிகளையும் அச்சுறுத்தி  அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தன.

இக்காட்டு யானைகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன் உத்தரவு படி சேரம்பாடி வனச்சரகர் சின்னத்தம்பி மற்றும் வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் நேற்று முன்தினம் பட்டாசு வெடித்து பல மணி நேரம் போராடி கோட்டமலை வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டித்தனர்.
தொடர்ந்து யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையாமல் இருப்பதற்கு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மஞ்சூர்: மஞ்சூர் அருகே உள்ள பெரியார்நகரில் பெரும்பாலானோர் தங்களது வீடுகளுக்கு முன்பு வாழை, மேரக்காய் மற்றும் பீன்ஸ் உள்பட பல்வேறு காய்கறிகளை பயிரிட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு காட்டு யானை ஒன்று பெரியார்நகர் கிராமத்துக்குள் புகுந்தது. தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவரது தோட்டத்தின் வேலிகளை உடைத்ததுடன் அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை கீழே சாய்த்து சூறையாடியது. பீன்ஸ் செடிகளையும் கால்களால் மிதித்து நாசம் செய்தது.  தொடர்ந்து அருகில் இருந்த தோட்டங்களுக்கும் சென்று பயிர்களை யானை சூறையாடியது. இதை தொடர்ந்து பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்தும், ஓசைகளை எழுப்பி யானையை அங்கிருந்து காட்டுக்குள் விரட்டினார்கள்.



Tags : Manjur ,Pandharpur , Pandharpur, Manzoor, fruit crops, wild elephants
× RELATED கொடைக்கானல் மஞ்சூர் வனப்பகுதியில்...