×

சோதனையில் தப்பிக்கும் வாகன ஓட்டிகளை பிடிக்க வாய்க்கால் கரையை உடைத்த போலீசார்ூ சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை

பரமக்குடி: வாகன சோதனையில் இருந்து தப்பிக்கும் வாகன ஓட்டிகளை பிடிப்பதற்காக, பாசன கால்வாயின் கரையை போலீசார் உடைத்துள்ளனர். கரையை சரி செய்து கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வைகையாற்றிலிருந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் கொண்டு செல்வதற்கு வலது, இடது புறங்களில் பிரதான கால்வாய் உள்ளது. வலது புறத்தில் பிரியும் கால்வாய் உரப்புளி, கள்ளிக்கோட்டை, மஞ்சக்கொல்லை நென்மேனி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கொடுத்து வருகிறது.

பரமக்குடி தாலுகா போலீசார் உரப்புளி விலக்கு பகுதியில் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். இதனால், இந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் இருசக்கர வாகனத்தில் சென்றால் சிக்கி விடுவோம் என்ற நோக்கில், மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையையொட்டியுள்ள பாலம் வழியாக கால்வாய் கரை வழியாக தப்பி விடுகின்றனர். மேலும், உரப்புளி சாலையில், கள்ளிக்கோட்டை பெண்களிடம் நகை பறிக்கும் மர்மநபர்கள் தார்ச்சாலையை பயன்படுத்தி போலீசாரிடம் சிக்கிக் கொள்வோம் எனக் கருதி கால்வாய் கரையை பயன்படுத்துகின்றனர். இதனால், பரமக்குடி தாலுகா போலீசார் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு கரையை உடைத்து பள்ளம் தோன்றியுள்ளனர்.

குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக கால்வாயின் கரையை உடைப்பதற்கு பதிலாக, அங்கு வேலி அமைத்து வாகனத்தில் வருபவர்களை தடுத்திருக்கலாம். போலீசார் உடைத்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. உடனடியாக கரையை சரிசெய்ய வேண்டும். என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உரப்புளி விவசாயிகள் கூறுகையில்” போலீசார் வாகன சோதனையில் ஈடுபடும் போது இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் கால்வாய்யை பயன்படுத்தியதற்காக கரையை உடைக்கக் கூடாது. போலீசாரை நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை காலம் தொடங்க உள்ள நிலையில், கரையை உடைத்திருப்பது வேதனை அளிக்கிது உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சரிசெய்யவேண்டும்’ என்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்” இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல், மது போதையில் செல்கின்றனர். உரப்புளி செல்லும் பாதையில் அதிகமான குற்றச் சம்பவங்கள் நடைபெறுகிறது. கரை பாதையை பயன்படுத்தி தப்பி செல்கின்றனர். இருசக்கர வாகனம் செல்வதற்கு தடை விதிக்கும் விதத்தில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. உடனடியாக சரி செய்யப்பட்டு குறுக்கு வழியில் செல்லும் வாகனங்களை பிடிப்பதற்கு போலீசார் நிறுத்தப்படுவார்கள்’ என்றனர்Tags : bank ,motorists ,canal , Motorists, farmers
× RELATED திருமயம் குழிபிறையில் உள்ள இந்தியன்...