×

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று எதிரொலி!: அமித்ஷாவை சந்தித்த மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோக்கு தனிமை!!

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த மற்றொரு மத்திய அமைச்சர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு உறுதியானதுமே மத்திய அமைச்சர் அமித்ஷா டெல்லி அருகே குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் விரைந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆரம்ப அறிகுறிகள் தெப்பட்டதுமே பரிசோதனை செய்துவிட்டதால் தற்போது நல்ல உடல்நலத்துடன் அவர் தம் ட்விட்டர் பக்கத்தில் இதனை பற்றி கூறியுள்ளார்.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அண்மையில் சந்தித்த மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று தம்மை தாமே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் கடந்த வியாழக்கிழமை அமித்ஷா பங்கேற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், கொரோனா தடுப்பு நெறிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டதால் பிரதமர் மோடி உள்ளிட்ட மற்ற அமைச்சர்களுக்கு எந்த சிக்கலும் எழவில்லை.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ ட்வீட் செய்ததாவது, மாண்புமிகு அமித்ஷா ஜியை ஒரு நாள் முன்பு மாலை சந்தித்தேன். எனது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விலகி, அடுத்த சில நாட்களுக்கு விரைவில் ஒரு சோதனை செய்யப்பட வேண்டும் என்று டாக்டர்களால் அறிவுறுத்தப்படுகிறேன். விதிகள் மற்றும் நெறிமுறையின்படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Home Minister ,Babul Supriyo ,Amit Shah ,Corona ,Union , Corona to Union Home Minister Amit Shah !: Union Minister Babul Supriyo who met Amit Shah is lonely !!
× RELATED கொரோனாவால் பாதிக்கப்பட்ட உள்துறை...