×

இந்தியாவில் மீண்டும் வருகிறதா? டிக் டாக்: டிக் டாக் நிறுவனத்தை விலைக்கு வாங்குவது குறித்து மைக்ரோசாப்ட் ஆய்வு...!!!

வாஷிங்டன்: இந்திய, சீன எல்லையான லடாக்கில் எல்லை தொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்து வரும் நிலையில், செயலிகள் மூலம் இந்தியா தொடர்பான தகவல்களை சீனா பெறுவதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து அதிரடியாக சீனாவின்  59 செயலிகளை மத்திய உள்துறை அமைச்சகம் தடை செய்தது. மத்திய அரசு தடை செய்துள்ள செயலிகளில் மிகவும் புகழ்பெற்றது டிக் டாக் செயலிதான். இதை இந்தியாவில் 50 கோடி பேர்  டவுன் லோடு செய்தனர். தமிழகத்தில் மட்டும் 4  கோடி பேர் வரை தங்கள் செல்போன்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்தினர்.

அந்த அளவுக்கு மேல்தட்டு மக்கள் முதல் பாமர மக்கள் வரை டிக் டாக் மோகத்தில் மூழ்கி கிடக்கும் அவல நிலை இருந்து வந்தது. பள்ளி மாணவர்கள் முதல் இளம் தலைமுறைகள் வரை, முதியவர்கள் முதல் குடும்ப பெண்கள் வரை என  பலரும் டிக் டாக் செயலிக்கு அடிமையாகி வந்தனர். டிக் டாக் செயலியால் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்ததையும் காணமுடிந்தது. வாலிபர்கள் பலரை குற்றச் செயல்களுக்கு அழைத்து சென்றது. இதேபோல், பல ஆபாச வீடியோக்களும்  இதில் தாராளமாக வலம் வந்தது.  

டிக் டாக் செயலியால் செல்போனில் மூழ்கி கிடக்கும் இளம் தலைமுறைகளை எப்படி மீட்கப் போகிறோம்? என்ற பதற்றம் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு அதிரடியாக  டிக் டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதித்துள்ளது தமிழகத்தில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கிடையே, சீனாவுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும், டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளது. இதற்கு மாற்று திட்டம் வைத்துள்ளோம். டிக்டாக் செயலிக்கு பதில் வேறு செயலி பயன்பாட்டிற்கு கொண்டு  வருவது பற்றி யோசித்து வருகிறோம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டிக் டாக் நிறுவனத்தை விலைக்கு வாங்குவது குறித்து தொடர்ந்து மைக்ரோசாப்ட் ஆய்வு செய்து வருகிறது. அமெரிக்காவும் தடை விதிக்கும் அபாயம் ஏற்பட்டதையடுத்து, மாற்று வழிகளை டிக் டாக் நிறுவனத்தின் தாய்  அமைப்பான பைட் டான்ஸ் நிறுவனம் யோசிக்கத் தொடங்கியது. அதன்படி, டிக் டாக் நிறுவனத்தின் அமெரிக்க செயல்பாடுகளை மட்டும் பிரபல மைக்ராசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக கடந்த சில  தினங்களாக செய்திகள் வெளியாகி வந்தன.

எனினும், டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பதில் டிரம்ப் உறுதியாக இருந்ததால், பைட் டான்ஸ் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையை மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுத்தி வைத்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் , அமெரிக்க  அதிபர் டிரம்பை  மைக்ரோசாப்ட் சி இ ஓ சத்ய நாதெல்லா சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மைக்ரோசாப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும்  இது தொடர்பாக மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறது. ஜனாதிபதியின் கவலைகளை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை மைக்ரோசாப்ட் முழுமையாக பாராட்டுகிறது. டிக்டாக்கை ஒரு முழுமையான பாதுகாப்பு  மறுஆய்வுக்கு உட்படுத்துவதற்கும், அமெரிக்க கருவூலம் உட்பட அமெரிக்காவிற்கு சரியான பொருளாதார நன்மைகளை வழங்குவதற்கும் உறுதிபூண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : India ,Microsoft Research , Coming back to India? Tic Tac Toe: Microsoft Research on Tic Tac Toe ... !!!
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...