×

நாகை எம்பி செல்வராஜுக்கு கொரோனா

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று, நாகை நாடாளுமன்ற தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.பி. செல்வராஜ் (62)  உட்பட மொத்தம் 43 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள எம்.பி. செல்வராஜ்தஞ்சாவூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 30ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் பிரிப்பு நிகழ்ச்சிக்காக நாகை மற்றும் மயிலாடுதுறை என 2 இடங்களிலும் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Selvaraj ,Naga ,Corona , Nagai MP Selvaraju, Corona
× RELATED பைக் மீது வேன் மோதி விபத்து மகன் பலி, தாய் படுகாயம்