×

விசாரணைக்கு வந்த பெண்ணிடம் இன்ஸ்பெக்டர் காட்டிய சில்மிஷம்: வைரலாக பரவும் வீடியோ

சென்னை: வழக்கு விசாரணைக்கு வந்த இளம் பெண்ணிடம் வீடியோ காலில் ஆபாச செய்கை செய்த புழல் போலீஸ் இன்ஸ்பெக்டரின், வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பென்சாம். 2018ம் ஆண்டில் பணியில் இருந்த போது போலீஸ் நிலையத்துக்கு வழக்கு ஒன்றுக்காக விசாரணைக்கு வந்த இளம் பெண்ணின் செல்போனில் வாட்ஸ் அப் வீடியோ காலில் அழைத்து, சீருடையிலேயே ஆபாசமாக பேசியும், பேன்ட் ஜிப்பை கழற்றி ஆபாச சைகை செய்தும், கொஞ்சியும் பேசியுள்ளார்.

இது போல பல பெண்களிடம் அவர் ஆபாசமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில், அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் சில மாதத்துக்கு பிறகு அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் பணிக்கு திரும்பினார். ஆனால் அவர் சென்னையை அடுத்த புழல் போலீஸ் நிலையத்துக்கு இன்பெக்டராக பணி நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், அந்த போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க  வரும் பெண்களிடம் இது போல நடந்து கொண்டாரா என்பது குறித்து இப்போது உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இன்ஸ்பெக்டரின் ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் பரவி போலீசார் மற்றும் பொதுமக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags : Inspector , Investigation, Woman, Inspector, Silmisham, Video
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு