×

சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிக்கு ஒப்பந்த படிவத்தை கையில் வாங்கி அதிர்ச்சி அளித்த அரசு அதிகாரிகள்: டெண்டர் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டதா என கான்ட்ராக்டர்கள் சந்தேகம்

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிக்காக ஒப்பந்தப்படிவத்தை கையில் வாங்கிய வினோதம் கான்ட்ராக்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 2வது வாரத்தில் தொடங்கும். எனவே, அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம், கொசஸ்தலையாற்று படுகைகள் மற்றும் கால்வாய்களில் தண்ணீர் செல்ல வசதியாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இக்கால்வாய்களை தூர்வாருவதற்காக பொதுப்பணித்துறை சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி நிதித்துறைக்கு அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் பேரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு சென்னை மண்டலத்தில் கீழ்பாலாறு கோட்டத்தில் 3 பணிக்கு ரூ.2.50 கோடி, கொசஸ்தலையாறு கோட்டத்தில் 2 பணிக்கு ரூ.2 கோடி, ஆரணியாறு கோட்ட வடிநிலத்தில் 3 பணிக்கு ரூ.2 கோடி, கிருஷ்ணா நீர்விநியோக திட்டகோட்டத்தில் 1 பணிக்கு ரூ.40 லட்சம், வெள்ளாறு கோட்டத்தில் 2 பணிக்கு ரூ.1 கோடி, சிதம்பரம் கொள்ளிடம் கோட்டத்தில் 3 பணிக்கு ரூ.2 கோடி என மொத்தம் 14 பணிக்கு ரூ.9.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் பணிகளை தொடங்கும் வகையில், பொதுப்பணித்துறை சார்பில் ஜூலை 31ம் தேதிக்குள் டெண்டர் திறக்கப்படும் என்று குறுகியகால டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பேரில், இப்பணிகளை கடந்த ஜூலை 31ம் தேதி டெண்டர் எடுக்க சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள பாலாறு வட்ட வடிநில கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் குவிந்தனர். வழக்கமாக பூட்டியிருக்கும் ஒப்பந்தப்புள்ளி பெட்டிக்குள் தான் ஒப்பந்ததாரர்கள் போடுவது வழக்கம். ஆனால், ஒப்பந்ததாரர்களிடம் விண்ணப்பத்தை அதிகாரிகள் கையில் பெற்று கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஒப்பந்ததாரர்கள் கேட்டபோது், தற்போது ஒப்பந்தப்புள்ளி பெட்டி வைக்க நேரமில்லை என்று கூறி விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் ஒப்பந்தபடிவம் பெற்ற அன்று மாலையே ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டன. ஆனால், அதிகாரிகள் திறக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், டெண்டரை முன்கூட்டியே அதிகாரிகள் முடிவு செய்து விட்டதாக கான்ட்ராக்டர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வழக்கமாக பூட்டியிருக்கும் ஒப்பந்தப்புள்ளி பெட்டிக்குள் தான் ஒப்பந்ததாரர்கள் போடுவது வழக்கம். ஆனால், ஒப்பந்ததாரர்களிடம் விண்ணப்பத்தை அதிகாரிகள் கையில் பெற்று கொண்டதாக கூறப்படுகிறது.


Tags : Government officials ,Contractors ,Northeast ,Chennai , Chennai, Northeast monsoon, precautionary work, government officials, tenders, contractors suspected
× RELATED கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தை...