×

கர்ப்பிணிகள், ஆஸ்துமா நோயாளிகளுக்கு சானிடைசரால் அதிக பாதிப்பு ஏற்படும்: இயற்கை மற்றும் யோகா மருத்துவர் தீபா விளக்கம்

சென்னை: சானிடைசர் அதிகம் பயன்படுத்துவதால் கர்ப்பிணிகள், ஆஸ்துமா நோயாளிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். மேலும், பெண்களுக்கு கரு உண்டாவதில் பிரச்னை ஏற்படும் என்று இயற்கை மற்றும் யோகா மருத்துவர் தீபா கூறினார்.
நாடு முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த சமூக இடைவெளி, முகக்கவசம், கையுறை பயன்படுத்தவும், கைகளை அடிக்கடி சானிடைசர் மற்றும் சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று அரசுகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஆனால், தற்போது அனைவரும் சானிடைசர் பயன்படுத்தி கைகளை கழுவுவதால் எந்தவிதமான பாதிப்பு ஏற்படுத்தும். அதை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்று இயற்கை மற்றும் யோகா மருத்துவர் தீபா கூறியுள்ளார்.

இதுகுறித்து, டாக்டர் தீபா கூறியதாவது:
கொரோனா காலத்தில் அனைவரும் சானிடைசரை பயன்படுத்துவதால் உடலில் அதிக பாதிப்பு ஏற்படுத்துகிறது. சானிடைசரை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளியில் செல்லும் போது, கார், பைக் ஓட்டும் போது, காய்கறி வாங்குவதற்கு மார்க்கெட்டுக்கு செல்லும்போது சோப்பு போட்டு கைகளை கழுவுவதற்கு வாய்ப்புகள் இல்லாதபோதுதான் சானிடைசர் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக வீட்டில் இருக்கும் போது சானிசைடர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பெண்கள் சானிடைசர் அதிகம் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

சானிடைசரில் ஆல்கஹால் சேர்க்கப்பட்ட சானிடைசர்தான் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று கூறி அரசாங்கமே ஆல்கஹால் சேர்க்கப்பட்ட சானிடைசரை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதை அதிகமாக பயன்படுத்துவதால் உடலில் நன்றாக உள்ள பாக்டீரியாவும் சேர்ந்து அழிவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நமது உடலில் மைக்ரோ பயோம்ஸ் பாதிக்கப்படுகிறது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, சீரான கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடலில் பல பிரச்னையை உண்டு பண்ணுகிறது.

சானிடைசர் அதிகம் பயன்படுத்துவதால் ஸ்ட்ராங் பாக்டீரியா அதிகமாக உற்பத்தி ஆகிறது. இதனால் உடலில் ஆன்டிபயஸ்டிக் ரெசிஸ்டென்ட் பாக்டீரியா அதிகமாக உற்பத்தியாகும். எந்த மருந்துகள் எடுத்தாலும் வேலை செய்யாத நிலை ஏற்படும். எனவே, அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தற்போது நிறைய சானிடைசர் பயன்படுத்தினால் கைகளை கழுவ வேண்டாம் என்று நினைத்துக் கொண்டு அப்படியே சிலர் சாப்பிட ஆரம்பித்து விடுகின்றனர். இதனால் சானிடைசரில் உள்ள கெமிக்கல் வயிற்றுக்குள் சென்று மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

சானிடைசர் அதிகமாக பயன்படுத்துவதால் தோலில் வறட்சி ஏற்பட்டு எக்சிமா என்னும் தோல் வியாதி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. கைகள் விரைவில் வறட்சி ஆகி, அதனால் தோல் வியாதி ஏற்படுகிறது. வேறு வழியில்லாமல் மாயிஸ்ரைசரும் சேர்த்து பயன்படுத்தினால் எக்சிமா வராமல் தடுக்க முடியும். சானிடைசர் பயன்படுத்தி கைகளை கழுவாமல் அப்படியே சாப்பிடுவதால் உடலில் ஆல்கஹால் விஷமாக மாறிவிடும் என்று மத்திய நோய் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், குழந்தைகள் சானிடைசரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

அதேபோன்று, எத்தால் ஆல்கஹால் சேர்க்கப்பட்ட சானிடைசர் பயன்படுத்துவதால், ஒரு சில ஆல்கஹால் சேர்க்கப்படாத சானிடைசரில் முக்கியமான ட்ரைகுளோசன், ட்ரைகுளோ கார்பன் என்று சொல்லக்கூடிய ஆன்டி மைக்ரோகாம்போன் உள்ளது. இதை அதிகமாக பயன்படுத்துவதால் பெண்களுக்கு கரு உண்டாவது தடுக்கப்படுகிறது. கர்ப்பிணிகள் அதிகம் பயன்படுத்துவதால் குழந்தையின் வளர்ச்சி தடைபடுகிறது. ஆஸ்துமா பிரச்னையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆன்டிபயஸ்டிக் ரெசிஸ்டென்ட் அதிகரிப்பதால் ஹார்மோன் பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

நமது உடலில் உள்ள பைதாலக்ஸ் மற்றும் போராபென்ஸ் என்கிற டாக்சிகெமிக்கல் சேர்க்கப்படுகிறது. இது மனித உடலில் உள்ள எண்டோகிரைம் கிளான்ட், ஹார்மோன்கள் சுரப்பதற்கு இருக்கக்கூடிய கிளான்ட்டில் பிரச்னைகளை ஏற்படுத்துவதால் கரு உண்டாவது குறைகிறது. தோல் வியாதிகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே இவற்றில் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அனைவரும் சோப்பு போட்டு கைகளை கழுவுவது அவசியம். வீடு முழுவதும் வேப்பிலை, மஞ்சள் தண்ணீர் தெளிக்கலாம். வெளியில் செல்பவர்கள் தவிர்க்க முடியாத நேரத்தில்தான் சானிடைசர் பயன்படுத்தவும், வெளியில் சென்று வந்த உடன் கண்டிப்பாக கை, கால்களை சோப்பு போட்டு கழுவ வேண்டும். இவ்வாறு டாக்டர் தீபா கூறினார்.


Tags : women ,sanitizer ,asthma sufferers ,Deepa ,Naturopath , Pregnant women, asthma sufferer, sanitizer, high risk, naturopath, yoga doctor, Deepa Description
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது